தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

52பார்த்தது
தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மே 3, 4, 5-ல் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில், கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 3-ல் 290 பேருந்துகளும், மே 4 ல் 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 3, 4-ல் 55 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி