'தங்கல்' நடிகை ஜைரா வாசிமின் தந்தை காலமானார்

68பார்த்தது
'தங்கல்' நடிகை ஜைரா வாசிமின் தந்தை காலமானார்
அமீர்கானின் 'தங்கல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஜைரா வாசிம். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவர், சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங் ஆகிய திரைப்படங்களில் நடித்தள்ளார். இந்த நிலையில், ஜைரா வாசிமின் தந்தை ஜாஹித் வாசிம் செவ்வாய்க்கிழமை (மே 28) காலமானார். இதை அவர் தனது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். ஜைரா வாசிமின் தந்தையின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜைரா தற்போது ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி