ரயிலில் இருந்த 27 கிலோ கஞ்சா பறிமுதல்

59பார்த்தது
ரயிலில் இருந்த 27 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயிலில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததாக ரயில்வே போலீசாருக்கு இன்று (மே 29) தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடத்தல் கஞ்சா சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி