பெண் தற்கொலை முயற்சி - 3 யூடியூபர்கள் கைது

15905பார்த்தது
பெண் தற்கொலை முயற்சி - 3 யூடியூபர்கள் கைது
யூடியூபில் அனுமதியின்றி காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து, தனியார் யூடியூப் (Veera Talks Double X) சேனல் உரிமையாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு சட்ட விரோதமாக இளம் பெண்ணின் பேட்டியை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த யூடியூப் சானலில் சர்ச்சைக்குறிய, ஆபாச பேச்சுக்கள் அடங்கிய பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி