மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கிறது!

13841பார்த்தது
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கிறது!
நாடு முழுவதும் டெலிகாம் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 4ஜி மற்றும் 5ஜி சேவை வழக்கும் டெலிகாம் நிறுவனங்கள் பிரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17 சதவிகிதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற ஜுன் 4ஆம் தேதி வெளியான பிறகு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. 2021ஆம் ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

தொடர்புடைய செய்தி