டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தில் நீடித்து வருகிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இதன்மூலம் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக புள்ளியை பெற்ற அஸ்வின் சாதனையை சமன் செய்தார்.