மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் நேற்று (செப்., 20) வெள்ளிக்கிழமை அதி பயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மகாராஷ்டிரா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வாடிகோத்ரி-ஜல்னா வழித்தடத்தில் ஷாபூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பல உயிர்களை காப்பாற்றினர்.