தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியான வருவாய் தீர்ப்பாயம் வருகிற 11-ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ஆலங்குளம், செங்கோட்டை தென்காசி, சிவகிரி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.
அது தொடர்ந்து சங்கரன்கோவிலில் 11, 12, 13, 14 மற்றும் 18ம் தேதி என 5 நாட்களும், திருவேங்கடத்தில் 11, 12, 13, 14 ஆகிய நான்கு நாட்களிலும் நடைபெறுகிறது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.