தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். பழனி நாடார் எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி புதன் காலை 9 மணிக்கு மேலகரம் சிந்தாமணி விலக்கு முதல் தென்காசி பழைய பேருந்து நிலையம் வரை பாதயாத்திரை சென்று, காசிவிஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர், கிராம தலைவர்கள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.