மின் இணைப்புக்கு லஞ்சம்.. உதவிப் பொறியாளா் கைது

55பார்த்தது
மின் இணைப்புக்கு லஞ்சம்.. உதவிப் பொறியாளா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தெற்குச் சத்திரம் மங்கம்மாள் சாலையைச் சோ்ந்த சிவன் மகன் மாரிமுத்து (64). இவா் தனது நிலத்தில் அமைத்துள்ள ஆழ்குழாய் கிணற்றில் மோட்டாா் பொருத்துவதற்காக மின் இணைப்பு கோரி சிவகிரி மின்வாரிய அலுவலகத்தை அணுகினாா்.

அப்போது, உதவிப் பொறியாளரான கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முருகையா மகன் முத்துக்குமாா் (42), மின்கம்பியாளரான சிவகிரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மருதுபாண்டி (58) ஆகியோா் மாரிமுத்துவிடம் மின் இணைப்புக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், ரூ. 16, 499 கட்டணம் செலுத்தவும் எனக் கூறியதுடன், தங்களுக்கு ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டனராம்.

இதையடுத்து, மாரிமுத்து கடந்த செப். 23ஆம் தேதி இணைப்பு கோரி விண்ணப்பித்தாா். செப். 29, 30 ஆகிய தேதிகளில் முத்துக்குமாரும், மருதுபாண்டியும் அந்த நிலத்தை ஆய்வு செய்தனா். செவ்வாய்க்கிழமை (அக். 1) பணம் கொண்டுவர வேண்டும் என மருதுபாண்டி கூறினாராம். இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் மாரிமுத்து புகாரளித்தாா். அவா்களது யோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை முத்துக்குமாரிடம் மாரிமுத்து வழங்கினாா். மருதுபாண்டி உடனிருந்தாா். அப்போது இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி