திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி - சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் 35 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.மேலும், "இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது. அவர்கள் வெளியிட்ட திருப்பதி வட்டு குறித்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்துயுள்ளனர்.