உரக்கிடங்கு அமைக்க ஆட்சியரிடம் மனு வழங்கிய நகர்மன்ற தலைவர்

260பார்த்தது
உரக்கிடங்கு அமைக்க ஆட்சியரிடம் மனு வழங்கிய நகர்மன்ற தலைவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது பயோமைனிங் முறையில் பழைய குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடங்கள் தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் அதிகம் உள்ளது. அவற்றை தினமும் சுத்தம் செய்து அகற்றப்படும் வாறுகால் கழிவுகள் மற்றும் மண்களையும் உரமாக்கிய பிறகு மீதமுள்ள மரக்கழிவுகள் போன்றவற்றை போடுவதற்கு உரக்கிடங்கு தேவைப்படுகிறது. ஆகவே வாறுகால் கழிவுகள், மண்களை கொட்டுவதற்கு தகுந்த இடத்தினை தேர்வு செய்து வழங்கும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரைரவிச்சந்திரனிடம் சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் கோரிக்கை மனு அளித்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், தி. மு. கமாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி