மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் மின்சார காரான மாருதி 'இ விட்டாரா' விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. டெல்டா, ஜீட்டா, ஆல்ஃபா ஆகிய மூன்று வகைகளில் இது வெளியாகிறது. இது தொடர்பான காட்சிகளை டெல்லியில் நடைபெற்ற பாரத் எக்ஸ்போவில் காண முடிந்தது. ஒரு சிங்கிள் சார்ஜில் 500 கிலோமீட்டர் வரையில் பயணிக்கக்கூடிய இந்த காரின் தொடக்க விலை ரூ. 20 லட்சமாக இருக்கலாம். அதிகாரப்பூர்வ தகவல் மார்ச்சில் வெளியாகும்.