கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் விஜய் கார்வின் (33). அரசு வேலைக்கு முயற்சி செய்துவரும் விஜய்க்கு கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சிந்து (47) என்பவரது பழக்கம் கிடைத்துள்ளது. தன்னால் ரயில்வே வேலை வாங்கித்தரமுடியும் எனக்கூறி விஜய்யை மைண்ட் வாஷ் செய்த சிந்து, அவரிடமிருந்து பல்வேறு தவணையில் ரூ.19 லட்சம் வாங்கியுள்ளார். சில நாட்களில் தபாலில் வேலை ஆஃபர் லெட்டர் வந்துள்ளது. பின்னர் அது போலி என தெரியவே, விஜய் அளித்த புகாரின் பேரில் சிந்துவை போலீசார் கைது செய்துள்ளனர்.