மதுரை: மேலவளவில் வையை, மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் சார்பில் செந்நெல் தில்லைநாயகம் பகுப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இயற்கை மருந்து மூலகத் துறை உதவிப் பேராசிரியர் ஜி.சத்தியபாலன், "மதுரையின் பாரம்பரிய நெல்லான தில்லைநாயகம் அரிசியில் புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளதால் இதை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும்" என்றார்.