கர்நாடக மாநிலத்தின் பிதர் மாவட்டம், பரகன் தண்டாவில் நடந்த ஒரு கௌரவக் கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததற்காக, தனது சொந்த மகளையே தந்தை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். மௌனிகா (18) வேறு சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அவரது தந்தை மோதிராம் ஜாதவ் அறிந்து கொண்டார். இதனால், ஆத்திரத்தில் இருந்த தந்தை, தனது மகளை அடித்துக் கொலை செய்தார். தொடர்ந்து தந்தையை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.