தென்காசி தெற்கு மாவட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதன்படி மாவட்ட எம். ஜி. ஆர். இளைஞரணி இணை செயலாளராக அ. கிருஷ்ண ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசி தொகுதி முன்னாள் எம். எல். ஏ. அண்ணாமலையின் மகன் ஆவார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிருஷ்ண ராஜாவுக்கு நேற்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.