தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.
குற்றால மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.