டாஸ்மாக் கடையை அகற்ற சமூக ஆர்வலர் கோரிக்கை

2946பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட அத்திப்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு அச்சுறுத்தலாகவும், குடி மகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கழுகுமலை பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்ற அத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ஜெயந்தன் மீது குடி போதையில் மினி வேனை ஓட்டி வந்து மோதிய விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இவ்வாறு அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் மற்றும் மதுபான‌ கடையை உடைக்கும் போராட்டம் நடைபெறும் என இந்திய தேசிய காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான அழகை கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி