தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 5கோடியே 36லட்சம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், ஒன்றிய சேர்மன் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.