மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

1054பார்த்தது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை
பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பழிவாங்கும் நோக்கத்திற்காக அடையாளம் தெரியாத நபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருவதாகவும், இதை தடுத்து புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தென்காசி *காவல் கண்காணிப்பாளர் திரு. T. P. சுரேஷ்குமார் B. E, M. B. A. , * அவர்களின் அறிவுறுத்தலின்படி *சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ்கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான காவல்துறையினர் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஷாஜி முகமது என்பவரை 20. 02. 2024 இன்று அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி