தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி சிந்தாமணியில் பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்க சுவாமி சமேத மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று இரவு 8ம் நாள் நவராத்திரி கொலு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு சொக்கலிங்க சுவாமி பால், மஞ்சள், சந்தன, குங்குமம், பால், இளநீர் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு இந்த 8ம் நாள் கொலு பூஜையில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரமும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.