சுப்பிரமணியபுரத்தில் ரூ. 12. 97 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள்

65பார்த்தது
சுப்பிரமணியபுரத்தில் ரூ. 12. 97 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மின்சார பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட விஸ்வநாதபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் ரூ12. 97லட்சத்தில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் தென்காசி கோட்டத்தில் விஸ்வநாதபுரத்தில் ரூ. 6. 74 லட்சம் மதிப்பிலும், சுப்பிரமணியபுரத்தில் ரூ. 6. 23 லட்சம் மதிப்பிலும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், வருங்கால மின் நுகா்வை கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இந்த இரண்டு மின்மாற்றிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தென்காசி கோட்ட செயற்பொறியாளா் திருமலைகுமாரசாமி, செங்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அன்னராஜ், முப்புடாதி, விஜயா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி