வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.