3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு தற்போது மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.