குஜராத்: சூரத்தைச் சேர்ந்த பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் தீபிகா படேல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், தீபிகா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீபிகா தற்கொலை செய்துகொண்டபோது அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் வீட்டிலும் அவரது கணவர் வயலில் இருந்துள்ளனர்.