தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் கிராமத்தில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இந்த பொத்தையில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இந்த பொத்தையின் மேற்கு பகுதியில் நேற்று இரவில் திடீரென வனத்துறை பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது.
காற்றின் வேகம் காரணமாக தீ மள மள என பரவியது. இதில் அரிய வகை மரம் செடிகொடிகள் எரிந்து நாசமாயின. இந்த தீயால் வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைப்பதற்கும்
இதனால் மூலிகைச் செடிகளும் மற்றும் வனவிலங்குகளும் இறப்பதற்கு சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.