தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் யூனியன் பகுதிக்குட்பட்ட திருமலையப்பபுரம் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமை கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் தொடங்கி வைத்தார். கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனி குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கர்ப்பிணிகளுக்கு முகாம் அட்டை வழங்கினர்.