கர்நாடக: தும்கூர் மாவட்டம் மதுகிரி பகுதி டிஎஸ்பியாக இருப்பவர் ராமச்சந்திரப்பா(58). இவர் நிலப்பிரச்னை தொடர்பாக புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை அலுவலகத்தின் கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாக சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பெண்ணிடம் அத்துமீறிய டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பலாத்கார வழக்கில் போலீசார் கைது செய்தனர்.