தமிழகத்தை சேர்ந்த இந்திய
கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். எளிய பின்னணியை கொண்ட நடராஜன் தனது திறமையால் இந்திய க
ிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார். தற்போது ஐ
பிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இந்த பார்ட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு, நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.