சென்னை புறநகரில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரியில் இன்று காலை (ஏப்ரல் - 04) நான்கு பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். காலை நேரம் என்பதால் ரயில் அருகே வருவது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் பெயிண்டிங்
வேலை செய்து வந்தவர்கள்.
வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது.