ஓடும் டிரக்கின் பின்னால் இரண்டு சிறுவர்கள் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்யும் திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு சிறுவர்கள் சறுக்கு பலகை அணிந்து வேகமாக வரும் டிரக்கின் பின்புறம் தொங்கிக் கொண்டிருப்பதை இந்த வீடியோவில் காணலாம். இந்த காணொளி வங்கதேசத்தின் டாக்காவிலிருந்து எடுக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.