டீன் ஏஜ் இளம்பெண்கள் இந்த விஷயத்தில் கவனம்..!

81பார்த்தது
டீன் ஏஜ் இளம்பெண்கள் இந்த விஷயத்தில் கவனம்..!
பதின்பருவத்தில் தவறு என உணராமல் டீன் ஏஜ் பெண்கள் செய்யும் சிறுசிறு செயல்கள்கூட பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். அதில் முக்கியமானது உணவுகள். பதின் பருவத்தில் அதிகமான வளர்ச்சிதை மாற்றம் நிகழும்; உடல் மற்றும் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் டீன் ஏஜ் பெண்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின், இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை சரிவிகித அளவில் உட்கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், உடல் எடை அதிகமாகிவிடும். இதனால் இறுதிகட்ட பள்ளிப் பருவமும், ஆரம்பகட்ட கல்லூரிப் பருவமும் அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரலாம்.

தொடர்புடைய செய்தி