தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

67பார்த்தது
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு, அரபிக்கடல், அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஒருசில பகுதிகளில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி