காவிரி விவகாரம் - சோமண்ணாவை விமர்சித்த ராமதாஸ்

60பார்த்தது
காவிரி விவகாரம் - சோமண்ணாவை விமர்சித்த ராமதாஸ்
மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துளார். அவர் கூறியதாவது, “மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனிமேலாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி