விக்கில் மறைத்து கொக்கைன் கடத்திய இளம்பெண் (வீடியோ)

82090பார்த்தது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.8.90 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டு பெண் ஒருவர் பிடிபட்டார். அந்தப்பெண் தனது போலியான தலைமுடி (விக்) மற்றும் உள்ளாடைகளில் கொக்கைனை மறைத்து வருகை தந்தார். ரகசிய தகவலின் பேரில் டிஆர்ஐ குழுவினர் சர்வதேச விமான நிலையத்தில் பொறி வைத்து அந்த பெண்ணை கைது செய்தனர். அவரது விக் கத்தரிக்கோலால் வெட்டப்பட்டு, கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி