தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் சிரமமின்றி பயணிக்க வசதியாக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி கடைசி நேரத்தில் பயணித்து நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க 16, 17 தேதிகளில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.