தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து அவரின் மகள்களான சங்கமித்ரா, சஞ்சுத்ரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இன்று, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்த அவர்கள் ”ஒருமுறை சவுமியா அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க சொல்லுங்கள்” என்றனர்.