இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற கம்பீர் முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இப்போது நான் உலகின் மிக வெற்றிகரமான அணியை வழிநடத்த வந்துள்ளேன். அணியில் உள்ள அனைவருடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. சமூக வலைதளங்களில் பல கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நமது பொறுப்புகளில் கவனம் செலுத்துவோம். இந்திய அணிக்கு தான் முக்கியத்துவம்" என தெரிவித்துள்ளார்.