ஓலா மற்றும் உபர் போன்ற பிரபலமான டாக்ஸி சேவை தளங்களுக்கு மாற்றாக நாடு முழுவதும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையை மத்திய அரசு தொடங்க உள்ளது. டாக்சி சேவை சந்தையின் அனைத்து நிறுவனங்களும் போட்டியிடும் வேளையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஊபர், ஓலா, ராபிடோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், “சஹ்கார் டாக்ஸி-ன் அனைத்து லாபங்களும் ஓட்டுநர்களுக்கு நேரடியாகச் செல்வதை உறுதி செய்யும்” என்றார்.