தமிழ்
நாட்டில் செப்டம்பர் 28 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி இஸ்லா
மியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்திக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் இந்த 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.