தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட எஸ்பி-யாக இருந்த வருண் குமார் ஐபிஎஸ் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கடராமன் டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்து அதே பொறுப்பில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வாங்கிடே டிஜிபி-யாக நியமனம்.