தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை இன்று (டிச. 30) தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்யவுள்ளார். தற்போது இத்திட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் இப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்பவர்களும் ரூ. 1000 பெற முடியும்.