தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (டிச.30), நாளையும் (டிச.31) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.