திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேற்று (டிச. 29) தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார். இதன்பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் #களம்2026-இல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம். பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் நிர்வாகிகள் உறுதியளித்தனர்” என்றார்.