மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு மர்மமான பழங்கால 'கால பைரவநாத்' கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் பூஜை பொருள், பிரசாதம் எல்லாமே மதுதானாம். உஜ்ஜைன் நகரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பத்ரசேனன் மன்னனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் எல்லோரும் தங்களது அர்ச்சனை தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்குடன் மது பாட்டில்களை எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.