கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகளைச் சென்னையில் உள்ள பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் 31ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளில் நேரடியாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.