ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என்ற 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.