உத்தர பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள 'கஹ்மர்' கிராமத்தை சேர்ந்தவர்கள் பல தலைமுறைகளாக ராணுவத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து இதுவரையில் 35 கர்னல்கள் மற்றும் 42 பிற மூத்த அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் சேவையாற்றி உள்ளனர். இவர்கள், முதல் மற்றும் இரண்டாம் போர்களிலும், சுதந்திரத்திற்கு பிறகும் பல போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.