திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இயங்கி வரும் ஃபாஸ்ட் புட் கடையின் ஊழியரை சிலர் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமான அந்த கடையில் பணிபுரிந்து வருபவர் சலீம். இவர், கடந்த 23ஆம் தேதி கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கடைக்கு வந்த திமுக பிரமுகர் நிர்மல் உள்பட மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.